''டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரிச் செடி இலைகளைப் பயன்படுத்தினால்... எந்தக் கவலையும் இல்லாமல், கருகரு முடியோடு கலக்கலாமே!'' என்று சொல்லும் கடலூர் அன்னமேரி பாட்டி, அவுரி சாயம் தயாரிக்கும் முறையையும் அழகாக எடுத்து வைத்தார். இதோ அவர் சொல்லும் இயற்கை டெக்னிக்!
அவுரி இலை - 50 கிராம், மருதாணி இலை - 50 கிராம், வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம், கறிவேப்பிலை - 50 கிராம், பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை... இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்). அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும். இதை பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.
avuri ilai endral enna
ReplyDeleteHi Fathima,
ReplyDeleteமுதலில் இந்த ப்ளாக் - ஐ பார்த்ததற்கு மிக்க நன்றி.
http://ta.wikipedia.org/s/9hg
இந்த லிங்க் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .
முதலில் இந்த ப்ளாக் - ஐ பார்த்ததற்கு மிக்க நன்றி.
ReplyDeletehttp://ta.wikipedia.org/s/9hg
இந்த லிங்க் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Thanks Rajasree raja :)
Delete