Saturday, August 6, 2022

"பொதினா" பெண்களின் வரப்பிரசாதம்.

 மாதவிடாய் சுழற்சிஒழுங்கின்மை, அதிக நாட்கள் போக்கு, அப்போதய வயிற்று வலி ,உடல் அசதி, இடுப்பு வலி நீங்கிட....

மாதவிலக்கு நாட்களில் தினசரி காலை வெறும் வயிற்றில் மூன்று ஸ்பூன் புதினா சாறு அருந்திவரவும்.
புதினாக்கீரையைச் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாவதோடு, புதிய இரத்தமும் உற்பத்தியாகும்.
.
வயிறுபோக்கு அதிகமாக இருந்தால், புதினா கீரையை துவையலாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு குணமாகும்.
.
புதினாக் கீரை, ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், உதவுகின்றது.
.
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
.
புதினாக் கீரையை கிள்ளி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.
.
புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்த பின்னர். சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். .
.
புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்துக்கொள்ளக்கொள்ளவேண்டும். இந்த பொடியில் தினமும் பல் தேய்த்து வந்தால், ஆயுள் முழுவதும், பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் உங்களை தீண்டாது. மேலும் பற்கள் பளபளக்கும், ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.
.
முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
.
தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு, புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
.
புதினாக்கீரையைத் துவையலாக சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.
.
புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்தினால், இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும்.
.
மஞ்சள் காமாலை, வறட்டு இருமல், வாதம், ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது

சிரம் காக்கும் தும்பை . தலைவலி குணமாகும்

 தலை சார்ந்த அனைத்துக் குறைபாடுகளையும் களையும் தலையாய மூலிகை தும்பையாகும். காய்ந்த தும்பை இலை ஐம்பது கிராம், சீரகம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, வால்மிளகு வகைக்கு பத்து கிராம் எடுத்துத் தூள்செய்யவும்.

இதில் இரண்டு கிராம் அளவு காலை, மாலை உணவுக்கு முன்பாக சாப்பிட்டு வர வருடக்கணக்காய் அவஸ்தைப்படுத்தும் தலைவலி தானே குணமாகும். கண், காது, மூக்கு, தொண்டை தொடர்பான தொல்லைகள் அனைத்தும் விலகும்.

முதுமையை விரட்டும் ஒரு இனிய மருந்து !!!

 தேவை:

– 10 பூண்டு பற்கள்
– 10 எலுமிச்சை பழச்சாறு
– 1 கிலோ ஆர்கானிக் தேன்
செய்முறை:
பூண்டை பொடியாக நறுக்கி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறுடன் நன்றாக கலக்கவும். இதை ஒரு சுத்தமான கண்ணாடி ஜாடியில் மாற்றி 8-10 நாட்கள் ஊறவிடவும்.
நன்றாக ஊறியவுடன் தினமும் 1 டீஸ்பூன் வீதம் காலை வெறும் வயிற்றிலும், மாலை உணவுக்கு முன்பும் சாப்பிடவும்.
திபேத்தியர்களின் இந்த ரகசிய கலவை நீண்ட ஆயுளுக்கும், முதுமை அடைவதை தாமதப்படுத்தவும் உதவும் ஒரு அற்புத மருந்து.

மஞ்சள்காமாலை முதல் மலட்டுத்தன்மை வரை போக்கும் கீழாநெல்லி!

 நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய மூலிகைகள் உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் 'கீழாநெல்லி'.

.
இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே இரண்டு வரிசைகளில் சிறியதாகக் காணப்படும். இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் அழகாக வரிசைகட்டி நிற்கும்.
.
இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று. இலைகளுக்குக் கீழே நெல்லிக்காயின் சிறிய வடிவமாக இதன் காய்கள் இருப்பதால்தான் இதை 'கீழாநெல்லி' என்று அழைக்கிறார்கள். இதேபோன்று இலைகளுக்கு மேலே காய் காணப்படும் மற்றொரு மூலிகைக்குப் பெயர் மேலாநெல்லி. இதுவும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன். மேலும், கீழாநெல்லியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தும் விவரிக்கிறார்.
.
*கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்:
மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.
கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்
உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கும்.
ரத்தசோகையைச் சரிசெய்யும் .
கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.
மலட்டுத் தன்மையைப் போக்கும்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
.
கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:
.
*மஞ்சள் காமாலை.
.
கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
.
*சர்க்கரை நோய்
உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.
*உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள்
கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
.
சீதமதி பித்த விடஞ் செவ்விழியி னோய்க் கூட்டம்
பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் -பூதலத்துட்
டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்
கீழ்வா யெனு நெல்லிக்கே!

மூல நோய் நீங்க

மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு. எந்த வகை மூலநோயாக இருந்தாலும் எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட வேண்டும்.

காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.
துத்திஇலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.
காரமான உணவு தவிர்க்கவும். வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.
மேற்கண்டவாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.
மற்றொரு முறை:
நான்கு துத்தி இலைகளுடன் சிறிய துண்டு மஞ்சள் சேரத்து தண்ணீர் சேரத்து அம்மியில் வைத்து அரைக்கவும். பிறகு அரைத்ததை பசும்பாலில் சேர்த்து கலக்கி காலை உணவுக்கு முன் 5 நாடகள் குடிக்கவும். மூலம போயே போச்சு.

மூலிகை செடிகளும் அதன் பயன்களும்..

 


உடல்நலம் காக்க இயற்கை வைத்தியம்