Wednesday, June 13, 2012

முகம் பொலிவாகணுமா டோன்ட் ஒரி லேடீஸ்

முகம் பொலிவாகணுமா டோன்ட் ஒரி லேடீஸ்

கத்திரி வெயிலில் கொஞ்ச நேரம் வெளியில் சென்று விட்டு வந்தாலே முகம் பொலிவிழந்து வாடிப்போகிறதே என கவலைப்படும் லேடீசா நீங்கள்... கவலைப்படாதீங்க... முகம் சிவப்பழகு பெற்று பொலிவுடன் இருக்க அழகுக்கலை நிபுணர் மகாலட்சுமி தரும் சில டிப்ஸ்களை ட்ரை பண்ணிபாருங்க...

கசகசாவுடன் எலுமிச்சைப்பழம் சாற்றை விட்டு நன்கு அரைத்து முகத்தில் தடவினால் கரும்படை மாறி சருமம் இயற்கை நிறத்தை பெறும்.
உருளைக்கிழங்கு சாறுடன் சமஅளவு தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் சருமம் பளபளப்பாக மாறி அழகு கூடும்.

1 தேக்கரண்டி முட்டை கோஸ் சாறு, 1 தேக்கரண்டி ஈஸ்ட் மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை கலந்து முகம், காது பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் தோல் வறட்சி நீங்கும்.

நன்றாக பழுத்த பப்பாளி பழம், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி கழுவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும். துளசி, வேப்பிலை இரண்டையும் அரைத்து அத்துடன் சந்தன பவுடரை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் ஏற்படும் புண்கள் குணமாகும்.

தேன் 1 தேக்கரண்டி, ஆரஞ்சு பழச்சாறு 1 தேக்கரண்டி, ரோஸ்வாட்டர் 1 தேக்கரண்டி, முல்தாணிமட்டித் தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.

எலுமிச்சை சாறு, தேன் இரண்டையும் கலந்து முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவடையும். பாதாம் பருப்பை பாலுடன் சேர்த்து அரைத்து முகத்தில் அரை மணிநேரம் கழித்து, கழுவி வந்தால் முகம் பொன் நிறமாக மாறி வரும். வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தடவ பருக்கள் மறைவதுடன் முகம் சிவப்பாகும்.

No comments:

Post a Comment