படுக்கை அறையில் டி.வி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. ஒருவேளை வைக்கவேண்டிய சூழ்நிலை இருந்தால் தூங்க போகும்போது பிளக்குக்கும், மின்சாரத்துக்கும் உள்ள தொடர்பை துண்டிக்கவேண்டும். ஆப்-செய்ய மறந்து தூங்கிவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப், டெலிவிஷன் போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
* செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 3, 4 அடி துரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும்.
* படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள் தூக்கத்திற்கு ஏற்றதல்ல!
No comments:
Post a Comment