Wednesday, June 13, 2012

இருதயம் பலத்துடனிருக்கணுமா ? திராட்சை சாப்பிடுங்கள்...!


திராட்சை இலையுதிர்க்கும் பல்லாண்டுவரை இருக்கும் கொடி வகையின் பழம் ஆகும். இதிலிருந்து வினாகிரி வைன் திராட்சை,விதைப் பிழிவு திராட்சை, விதை எண்ணெய் என்பனவும் செய்யப்படுகின்றன. திராட்சையில்பலவகைகள் இருப்பினும் பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும் உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு. உணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி உலகில் 75866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சைச் செய்கை நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது.

திராட்சையில் உள்ள சத்துக்கள்...

திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம்.
தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ்,பெக்டின், முதலானவையும் பார்டாரிக் அமிலம் மாலிக் அமிலம் சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும் புரதம் சுண்ணாம்பு தாமிரம் இரும்பு பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

திராட்சை மருத்துவ குணங்கள்..

தோல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று அவுன்ஸ் என இருவேளை அருந்தி வர குணம் பெறலாம். திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும்.

குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது. வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி 5 முதல் 10 வரை உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள் பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

No comments:

Post a Comment