Thursday, July 26, 2012

ஆறு குவளை (1 1/2 லிட்டர்) தண்ணீர் செய்யும் அற்புதங்கள் தண்ணீர் சிகிச்சை (Water therapy)


அக்குபஞ்சர், அக்குப்ரஷர், காந்த சிகிச்சை, மாக்சா என்ற ஜப்பானிய சூடு பயிற்சி முறை ஆகிய ஐந்து முறைகளால், குணப்படுத்த முடியாத எல்லா விதமான நோய்களையும் குடி தண்ணீரால் குணப்படுத்தலாமென்று ஜப்பான் உடல் நலிவு கழகம் (Japanese Sickness Association) கூறியுள்ளது. அதற்கு அவர்கள் கூறியுள்ள சிகிச்சை முறையே தண்ணீர் சிகிச்சை... (Water Therapy) ஆகும். தண்ணீர் சிகிச்சையை (Water Therapy) செய்யும் முறை

தண்ணீர் சிகிச்சை (Water Therapy) என்றதும் என்னவோ எதோவென்று பயந்து விடாதீர்கள். நாம் தினமும் குடிக்கும் நல்ல தண்ணீர் மட்டுமே இந்த சிகிச்சைக்கு போதுமானதாகும். அதை எப்போது, எவ்வாறு, எவ்வளவு குடிக்க வேண்டுமென்பதே தண்ணீர் சிகிச்சை(Water Therapy)யாகும்.

காலை எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்துவிட்டு வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன்பாகவே சரியாக ஒன்றறை லிட்டர் {ஒன்றறை லிட்டர் தண்ணீர் எவ்வளவு டம்ப்ளர் அல்லது குவளை ஆகுமென்று அளந்து வைத்துக் கொள்வது நல்லது. சுமாராக 6 டம்ப்ளர் அளவிற்கு வரும்) தண்ணீரை ஒரே தடவையில் குடித்து விட வேண்டும்.

ஆரம்பத்தில் ஒன்றறை லிட்டர் தண்ணீரை ஒரே தடவையில் குடித்து விட முடியாது. கொஞ்சம் சிரமாமக இருக்கும். ஆரம்பக் காலங்களில் முதலில் எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவும் குடித்து விட்டு சிறிது நேரம் நடந்து விட்டு வந்து மீதமுள்ள தண்ணீர் அனைத்தையும் குடித்து விட வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டியவைதண்ணீரைக் குடிப்பதற்கு முன் ஒன்றறை மணி நேரமும், குடித்த பின் ஒன்றறை மணி நேரமும் வேறு காபி, டீ உள்ளிட்ட எவ்வித பானங்களையோ, நொறுக்கு தீனியோ சாப்பிட்டிருக்க கூடாது.

காலையில் பல் விளக்கும் முன்பே குடிக்க வேண்டுமென்பதால் முதல் நாளிரவே பல் துலக்கிக் கொள்வது நல்லது.

முதல் நாளிரவே தண்ணீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

மூட்டுவாதம் (Arthritis), வாயுப் பிடிப்பு முதலிய நோயுள்ளவர்கள் ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை இதை செய்து வந்தால் நல்லது. காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்கு ஒன்றறை மணி நேரம் முன்பு தண்ணீர் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

தண்ணீர் சிகிச்சை (Water Therapy) மூலம் குணமாகும் நோய்கள்

கீழ்வாதம் (Rheumatism)பொதுவான பக்கவாதம் (General Paralysis)ஊளைச்சதை (Obesity)மூட்டுவலி (Arthritis)காதில் இரைச்சல் (Sinusitis)மிகையான இருதய துடிப்பு (Tachycardia)மயக்கம் (Giddiness, Anesthesia )தலைவலி (Headache)இரத்த அழுத்தம் (B/P Hypertension)இரத்த சோகை (Anemia)நீரிழிவு (Diabetes)கண் சம்பந்தமான நோய்கள் (Eye Troubles)கண் சிவப்பு (Ophthalmic Hemorrhage and Ophthalmic)ஒழுங்கில்லாத மாதவிடாய் (Irregular Menstruation)கருப்பைப் புற்றுநோய் (Uterine Cancer)மார்பகப் புற்றுநோய் (Cancer or Mammary glands or breast cancer)தொண்டை சம்பந்தமான நோய்கள் (Laryngitis)இருமல் (Cough)ஆஸ்த்மா (Asthma)சளி (Bronchits)சயரோகம் (Pulmonary Tuberculosis T.B.)மூளைக்காய்ச்சல் (Meningitis)கல்லீரல் சம்பந்தமான நோய்கள் (Hepatic Diseases)சிறுநீரகக் குழாய் சம்பந்தமான நோய்கள் (Urogenital Diseases)பித்த கோளாறுகள் (Hyperacidity)வாய்வுக் கோளாறுகள், வயிற்றுப்பொருமல் (Gastritis)மூலம் (Rectal Prolapse)மலச்சிக்கல் (Constipation)உதிரப்போக்கு (Hemorrhoids)

2 comments:

  1. நன்றாகத் துலக்கிய செப்புப் பாத்திரத்தில் முதல்நாள் இரவு தண்ணீர் நிரப்பி அதில் புளி இலை ஒரு கை அளவு போட்டு வைத்து மறுநாள் காலை நீங்கள் குறிப்பிட்ட படி குடித்தால் பல நோய்களுக்கும் மருந்தாகும் என்று படித்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் குறிப்புக்கு நன்றி நண்பரே.

      Delete