Thursday, July 12, 2012

உடம்புக்கு வெயில் அவசியம்!: உடல் குண்டாவதை தடுக்கும்..!!!

உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனோரின் தலையாய பிரச்சினையாக உள்ளது. இதுவே நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், இதயநோய்களுக்கும் காரணமாகிவிடுகிறது. உடல்பருமனுக்கு காரணம் உணவுப்பழக்கம் மட்டுமல்ல உடலில் வெயில் படாமல் இருந்தாலும் உடல்பருமானாகும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

வெயில் படாமல் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறைதான் உடல் பருமனாவதற்கு ஒரு காரணம் என்று நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியஒளியில் உள்ள வைட்டமின் டி சத்து உடலில் நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது கெட்ட கொழுப்பை கரைக்கிறது. ஆனால் இன்றைக்கு குழந்தைகளை பூட்டிய அறைக்குள் வைத்திருப்பதாலும் வெயிலே படாமல் வளர்ப்பதாலும் அவர்களுக்குத் தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் குழந்தை பருவத்திலேயே உடல்பருமன் அதிகரித்துவிடுகிறது.

அதேபோல் பூட்டிய அறைக்கு ஏசி போட்டு பணி புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டு அதன் காரணமாகவும் பெரும்பாலோனோரின் உடல் பருமனடைகிறது என்கின்றனர் நிபுணர்கள்.உடம்பில் பழுப்பு கொழுப்பு என்றும் வெள்ளைக்கொழுப்பு என்றும் இரண்டு ரக கொழுப்புகள் உள்ளன. உடல் குண்டாவதற்குக் காரணம் வெள்ளைக்கொழுப்பு.

பழுப்புக் கொழுப்பானது குளிர்காலத்தில் உடம்பை சூடாக வைத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பொருள். எடைக்கு எடை, சக்கரையைவிட அது 300 மடங்கு அதிக உடல் சூட்டைக் கொடுக்கக்கூடியது.
பிறந்த குழந்தையின் உடலிலும், குளிர்காலத்தில் நிலத்தடியில வளைக்குள் ஹைபர்னேஷன் செய்யும் முயல் போன்ற உயிரினங்களிலும் பழுப்புக்கொழுப்பு காணப்படுகிறது. இது நல்ல கொழுப்பு. உடலை குண்டாக்காது. உடலில் வெயில்பட்டால் பழுப்புக்கொழுப்பு உருவாகிறது. வெயில் இல்லாத குளிர்காலத்தில் இது வெப்பம் கொடுத்து உடம்பைக் காக்கிறது.

மனிதர்கள் வெயில்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் சாப்பிடும் சாப்பாடு வெள்ளைக் கொழுப்பாக மாறி உடம்பை குண்டாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள் எனவே தினசரி சிறிதுநேரமாவது வெயிலில் காய்ந்தால் உடல் குண்டாவதை தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்து கண்நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதனால்தான் தினசரி சூரியநமஸ்காரம் செய்வது நல்லது என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் நீரிழிவு, இதயநோய், உயர்ரத்தஅழுத்தம், புரோஸ்டேட், மார்பகப்புற்றுநோய் போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment