அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகிறதா? குடற்புண் அல்லது `அல்சர்' ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால், அல்சர் மட்டுமே வயிற்று வலிக்கு பொதுவான காரணமாகாது. ஒரு சிலர் அல்சர் பிரச்சினைக்கு 5 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வருகிறேன். ஆனால் இன்னமும் குணமாகவில்லை என்று கூறுவார்கள்.
வயிற்று வலிக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் முன் சிறுகுடல் புண் (அல்சர்) பிரச்னை. ஆனால், இதனை பலர் நம்ப மறுக்கிறார்கள். சிலர் அல்சர் என தாங்களே முடிவு செய்து கொண்டு, மருந்து கடைகளுக்குச் சென்று சுய மருத்துவம் செய்வதோடு, பெரும் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.
வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதித்தாலும் வயிற்றில் வலி வரலாம். குறிப்பாக நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள், தொடர் கணைய அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோயோடு, முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும் (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும்.
எனவே வயிற்று வலிக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தல் மிக முக்கியம். குறிப்பாக உணவுக் குழாய் மற்றும் இரைப்பை இணையும் இடத்தில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகி றது.
சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். அத்துடன் மன உளச்சல் மற்றும் அதிகமான காரம் சாப்பிடுவதால் இந்தப் பிரச்னை தீவிரமாகும்.
உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களாகும். உணவுக்குப் பின் அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் குடல் பிரச்னை குறிப்பாக சுருக்கம் மற்று ம் புற்றுக் கட்டியாக இருக்கக்கூடும்.
பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்று வலிக்கு புற்று நோய் காரணமாக இருக்கக்கூடும். மலக்குடலில் ஏற்படும் புற்று நோய் காரணமாக வயிற்று வலி, மலத்தில் ரத்தம் மற்றும் வயிற்றுப் பெருக்கம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.
அல்சர் மட்டுமே உள்ள நோயாளிக்கு அதிகமாக பசி எடுக்கும். உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி குறையும்.
எனவே வயிற்று வலி என்ற உடனேயே அல்சர் என்று கருதி, சுய மருத்துவம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
வயிற்று வலி தொடரும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுப் பகுதி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளைச் செய்து கொள்தல் அவசியம். தேவைப்பட்டால் சி.டி. பரிசோதனை பரிந்துரைக்கப்படும். எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யாமல் வயிற்று வலிக்கு "அல்சர்' காரணம் என யாரும் நினைக்க வேண்டாம்.
No comments:
Post a Comment