Sunday, December 9, 2012

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-


முகச்சுருக்கம் : முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவிவர மறைந்துவிடும்.


முகம் அழகுபெற : துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக் காயவிட்டு குளித்துவரவும்.

உடல் மினுமினுக்க : நீல புஷ்ப தைலம் தேய்த்துக் குளித்துவர உடல் குளிர்ச்சி பெறும். உடம்பும் மினுமினுப்படையும்.

உடல் உஷ்ணத்தைக் குறைக்க : மல்லிகைப்பூவை அதிகமாக பயன்படுத்தக்கூடாது.

முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர : கருவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர பயன் விரைவில்.

கண்கள் குளிர்ச்சியடைய : வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்.

படர்தாமரை நீங்க : சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி, ஊறிய பின் கழுவினால் விரைவில் குணமுண்டாகும்.

வழுக்கை மறைந்து முடிவளர : அல்லி இதழ்களை சந்தனத்துடன் அரைத்து வழுக்கைக்கு தடவி 2 மணி நேரம் காயவிட்டு குளிக்கவேண்டும்.

நரைமுடி கருப்பாக : தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

முடி உதிர்வது நிற்க : காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர விரைவில் குணமாகும்.

கூந்தல் மிருதுவாக : சீத்தாப்பழக் கொட்டையை காய வைத்துப் பொடியாக்கி சீயக்காய்த் தூளுடன் கலந்து தேய்த்துக் குளிக்கவும்.

No comments:

Post a Comment