கராத்தே, ஜூடோ, குத்துச்சண்டை, ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஜம்பிங் போன்ற பயிற்சிகளைச் செய்தால் என்னென்ன பலன்கள் ஏற்படுமோ, அவை எல்லாம் ஏரோபிக்ஸிலும் கிடைக்கும்.
ஏரோபிக்ஸ் செய்யும்போது ரத்த நாளங்கள் விரிவடைந்து அதிக ஆக்சிஜனை உடலுக்குள் கொண்டுசெல்லும். இதயம் வேகமாகத் துடிப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடலில் சக்தி அதிகரிப்பதால் சோர்வு இல்லாமல் இருக்க முடியும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதால், காய்ச்சல், சளி போன்ற தொல்லைகளும் அண்டாது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள்கூட எளிமையான ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். எதிர்காலத்தில் இதயப் பிரச்னை மற்றும் மூட்டுத் தேய்மானப் பிரச்னைகளில் இருந்து இந்தப் பயிற்சி அவர்களைக் காப்பாற்றும்.
உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை ஏரோபிக்ஸ் குறைக்கிறது. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன அழுத்தம், மனச் சோர்வு மற்றும் களைப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். தசைகள் உறுதியாகவும் வலுவாகவும் இருப்பதால், நீண்ட காலம் இளமையான தோற்றத்தோடு இருக்கலாம். டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் மனிதனின் ஆயுட்காலத்தையும் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்தப் பயிற்சிகள் செய்வதற்கு வயது ஒரு தடை அல்ல. 15 வயதில் இருந்து 60 வயதைக் கடந்தவர்கள்கூட பயிற்சியில் வந்து சேருகிறார்கள். ஆனால், டி.வி-யைப் பார்த்தோ அல்லது தனக்குத்தானே வீட்டில் இருந்தபடியே இந்தப் பயிற்சியை செய்வதோ நல்லது அல்ல நண்பர்களே
No comments:
Post a Comment