காய்கறி வடிவில் வரும் விஷம் ( காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வோர் குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டிய பதிவு)
உடல் நலத்தில் கவனம் உள்ளவர்கள் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்வார்கள். ஆனால் அந்த காய்கறிகளே விஷமாக மாறி அவர்களின் உடலில் சென்று அடைகின்றது என்ற உண்மை தெரிந்தால் ஒரு அதிர்ச்சி உண்டாகிறதுதானே நமக்கு?
அது உண்மையா என்று பார்த்தால் அது உண்மையாகத்தான் இருக்கிறது, காய்கறியில் எப்படி விஷம் சேருகிறது என்று பார்த்தால் அதை விளைவிக்க பயன்படுத்து உரம் மற்றும் பூச்சி கொல்லிகள் மூலம்தான் என்பது அறிய முடியும், இந்தியாவில் அதிக அளவில் மகசூலை அள்ளிக் குவிக்க அதிக அளவு உரங்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் தடை செய்யப்பட்ட உரங்களையும் இன்னும் பலர் உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டிய அரசாங்கமோ ஒழுங்கற்று இருக்கிறது.
இதனால் காய்கறிகளை சமையலில் சேர்த்து கொள்பவர்கள் பலவித உடல் நலக் குறைவிற்கு உட்படுத்தப்பட்டு ஹாஸ்பிடலுக்கு பணத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இதில் இருந்து நம்மை உடல் நலத்தை பாதுகாத்து கொள்வது எப்படி என்று பார்க்கும் போது திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா விவசாய பல்கலைகழகத்தில் உள்ளவர்கள் ஆராய்ச்சி செய்து ஒரு வழி முறையை கண்டுபிடித்துள்ளனர் (A study on the impact of pesticide residue on farm-produce - conducted by the pesticide research and analytical laboratory of the Kerala Agricultural University )
இது மிகவும் எளிய முறை எல்லாலோராலும் எல்லாவிட்டிலும் மிக எளிதாக பயன் படுத்துக்கூடிய ஒரு முறைதான். இந்த முறைப்படி நமக்கு தேவையானது கொஞ்சம் புளித் தண்ணிரும் சிறிது வினிகரும்தான். இந்த இரண்டையும் மிக்ஸ் செய்து அதில் காய்கறிகளை சிறிது ஊறவைத்து கழுவினால் காய்கறிகளில் படிந்திருக்கும் உரங்கள், பூச்சி கொல்லிகள் அனைத்தும் 95 சதவிகிதம் போய்விடும்.
"In our study, we found that tamarind water and vinegar were best suited to remove pesticides from vegetables," says Dr Thomas Biju Mathew, department of entomology, who conducted the tests along with a team of scientists. He says they used a majority of pesticides available in the market -- rated red (extreme), yellow (high) and blue (moderate) according to toxicity levels, for the tests.
"Tamarind water and vinegar were effective in removing the pesticide residue (up to 95%), especially in spinach, curry leaves, chillies, lady's finger, snake gourds and brinjals that were contaminated with heavy doses of pesticides."
காய்கறிகளை 20 mg புளியில் கரைத்த நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் போதும் பாவக்காய் பீன்ஸ் போன்ற காய்கறிகளை இரு முறை கழுவவும்.
இவர்களின் ஆராய்ச்சியில் ஃப்ரவுன் அரிசியைவிட பாசுமதி அரிசியில் உரப்படிமான மிக அதிக அளவில் இருப்பதையும் கண்டு பிடித்தனர். அதனையும் நன்கு கழுவி சமைத்தால் 85 சதவிகிதம் அதில் படிந்துள்ள உரத்தன்மை நீங்கி விடும்.
The Central Insecticides Board and Registration Committee நாடு முழுவதும் 240 pesticides களுக்கு அனுமதியையும் 70 வகையான pesticides யை தடையும் செய்துள்ளன.
இந்த கேரளா அக்ரிகல்ட்சர் யூனிவர்சிட்டியில் சமிபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அநேக காய்கறிகளில் அதுவும் குறிப்பாக மிளகாயில் (18 of 48 samples) & கறிவேப்பிலையில் (47 of 79 samples) தடை செய்யப்படுள்ள pesticides கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment