Sunday, May 5, 2013

கம்ப்யூட்டர் பணியும் கண்ணின் பிரச்சனையும்


மனிதனின் இன்றை வாழ்க்கை மனம் மகிழந்த மனைவியோடும், பெற்றெடுத்த பிள்ளைகளோடும், குடும்பத்தோடும் கொஞ்சி விளையாட நேரமில்லா இயந்திர வாழ்க்கையாக மனிதனின் வாழ்க்கை மாறி விட்டன.

இந்நிலையில் உணவுக்கும், உறக்கத்துக்கும் மற்றும் உறவுக்கும் இரண்டாம்பட்ச பணியாக மாறிவிட்டன. அந்தயளவுக்கு கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகவும், மனிதனின் மூன்றாவது கரமாக மாறிவிட்டன.

இந்த மூன்றாவது கரத்தின் கம்ப்யூட்டர் பணியால் 24 மணி நேரமும் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளன.

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம், அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து மருத்துவர்கள் தரும் விளக்கங்களைப் பற்றி காண்போம்.

அறிகுறிகள்: அதிக நேரம் கம்ப்யூட்டரோடு உபயோகத்தில் இருப்பவர்களுக்கு கண்கள் வறண்டும்,கண்ணீரே இல்லாமல் போகும். அடிக்கடி தலைவலி, கண்களில் துடிப்பு எரிச்சல், பார்வையில் மங்கிபோன்ற மாதிரி ஒர் உணர்வுகள் தோன்றும்.

விளைவுகள்: பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெள்ளெழுத்தோடு சேர்ந்து இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்சனைகளும் வரும் தொடங்கும். இவை அந்த வயதி வரக்கூடிய ஒன்றுதான் என ஒதுக்கினால் பிரச்சனைகள் விஸ்வரூமாக மாறிவிடும். இந்த பிரச்சனையை ஆரம்ப காலத்திலே அறிந்து அதற்கான சோதனைகளை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் விஸ்வரூபத்துக்கு விடையளிக்கலாம்.

தீர்வுகள்:

1. கம்ப்யூட்டர் பணிக்கு சேருவதற்கு முன்பு கண் பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் பாதுகாப்பானது.

2. 20- 20- 20 என்ற விதியை பின்பற்ற வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கொரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்க வேண்டும்.

3. உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்த்து மூடிய கண்களின் மேல் வைத்து ஒத்தி எடுக்க வேண்டும்.

4. கண்களில் வறச்சி காணப்பட்டால் கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். வறச்சியின் அளவை பொறுத்து கண்களுக்கான செயற்கையான கண்ணீர் மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.

5. தூரப்பார்வையும் இல்லாமல், கிட்டப்பார்வையும் இல்லாமல் நடுத்தர பார்வையோடு கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும்.

6. கம்ப்யூட்டர் பணிக்கான பிரத்யேக கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது ஸ்பெஷல் கோட்டிங்கோடு, நடுத்தரப் பார்வைக்கு என உள்ள கண்ணாடிகளை கேட்டு வாங்கி பயன்படுத்த வேண்டும்.

7. கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டும். கால்களின் பாதங்கள் தரையைத் தொடுகிற வண்ணம் அமர்ந்திருக்க வேண்டும். அதாவது 90 டிகிரி கோணத்தில் அமர்வது சரியானதாகும்.

8. கம்ப்யூட்டருக்கு ஆன்ட்டிரெஃப்ளெக்ஷன் மானிடர் பொருத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment