Wednesday, October 9, 2013

சைக்கிளிங்” -இதய நோயைத் தடுக்கும்


மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற இதய நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.ஆர்.ரகுராம் கலந்து கொண்டு பேசுகையில், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் கூடவே இதய நோயும் வந்து விடும். இவர்களுக்குர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் நிபுணர்களின் ஆலோசனை அவசியம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனைப்படி இதயநோய்க்கான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் முற்றிலும் குணப்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இதய இரத்தக் குழாடீநுகளில் 2 அல்லது 3 இடங்களில் அடைப்பு இருந்தால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதே சிறந்தது. ஏனென்றால் சர்க்கரை நோயின் காரணமாக இதயத்தில் பல்வேறு இடங்களில் அடைப்புகள் இருக்கலாம் அல்லது மீண்டும் அடைப்புகள் வரலாம். 6 மாதத்திற்கு ஒரு முறை ட்ரெட் மில், மற்றும் எக்கோ பரிசோதனை அவசியம். ட்ரட்மில் பரிசோதனை மேற்கொண்டால் இதய அடைப்புகளை தெரிந்து கொள்ளலாம். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இதய பிரச்சனைகள் வராது.

ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பதால் இதய நோய் வாடீநுப்புகள் குறைவு. அதே சூழல் மெனோபாஸ் நிலையில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். இவர்களும் இதய நோய் நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும். அத்துடன் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பரிசோதனை மேற்கொள்ளலாம். சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், புகை பிடித்தல் போன்றவை இதயநோய்க்கு முக்கிய காரணமாகும்.

முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும், தள்ளிப்போடக் கூடக் கூடிய வியாதி மாரடைப்பாகும். 40 வயதில் வருவதை 60 வயதிலோ அல்லது 70 வயதிலோ நம்மால் மாற்றியமைக்க முடியும். முக்கியமாக மூன்று விதமான பழக்க வழக்கங்களை கையாண்டால் இது சாத்தியமாகும். ஒழுங்கான, குறைந்த பட்ச 40 நிமிட

நடைப்பயிற்சி, உணவு பழக்கவழக்க முறைகள், மரபணு நோய்களான உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவைகளுக்கு டாக்டரின் ஆலோசனையில் முறையான சிகிச்சை. மேற்கூறிய முறைகளை முறைப்படி கையாண்டால் 100 சதவீத மாரடைப்பு நோயை தள்ளிப்போட முடியும். குறிப்பாக புகைப்பதைமுற்றிலும் நிறுத்த வேண்டும். மாரடைப்பு நோய்க்கு புகைத்தல் முக்கிய காரணி. துரித உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் . அதில் கலோரிகள் இல்லாததால் உடலுக்கு எந்த பயனுமில்லை. இது கெட்ட கொழுப்புகளாக மாறி, இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. நமது மக்கள் தவறான விளம்பரங்களைப் பார்த்து குறுக்கு வழி சிகிச்சையை மேற்கொள்கின்றனர். மிகவும் தவறு. நல்ல தூக்கம் பரிபூரண ஆரோக்கியம் தரும். எதிலும் நிதானம் தவறாதீர். விருந்து, கேளிக்கை, உடல் உறவு, உரையாடல்,பேச்சுக்கள் எதுவானாலும் சரி…. அளவுக்கு மீறாமல் இருந்து வாருங்கள். தொல்லைகள் தொடராது.இதயத்திற்கு நெருக்கடி தரும் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளை அறவே தொடராதீர்.தினமும் 5 கி.மீ. நடைப் பயிற்சி பொரித்த கறி, மீன், பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட எண்ணெடீநு மூலம் தயாரித்த உணவுகளை தவிர்த்தல் அவசியம். சர்க்கரை நோயாளிகள் பப்பாளி, கொடீநுயா, சாத்துக்குடி போன்ற பழங்களை உண்ணலாம்.முக்கனிகளான மா, பலா, வாழை அறவே ஒதுக்க வேண்டும்.

சைக்கிள் பயிற்சி மிகவும் நல்லது. தினமும்சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் வேண்டும், உங்கள் வயது எதுவானாலும் சரி உடற்பயிற்சி அவசியம்.நாள்தோறும் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குக் குறையாமல் நடந்தால், அநேகமாக எந்த இதய நோயாக இருந்தாலும் அது தீவிரமடையாமல் தடுக்கலாம். நடப்பதைப் போல சைக்கிள் ஓட்டுதலும் நன்மை தரும்.

No comments:

Post a Comment