Monday, February 8, 2016

பேன், பொடுகு தொல்லை நீங்க

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும். இதனால் பேன் தொல்லை குறையும்.
துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேன் செத்து உதிர்ந்து விடும் தலைமுடியும் நன்றாக வளரும்.
50 கிராம் உப்பு கலக்காத வேப்பம்பூவுடன் 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
தலை முடி செழித்து வளர
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். பின்னர் முடி செழித்து வளரும்.
முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.
ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
பல் கரை மறைய
உப்பும் எலுமிச்சை சாறும் கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கரைகள் நீங்கி பற்கள் பளிச்சென ஆகும்.
முகம் சிகப்பழகு பெற
பாலில் ஒரு ஸ்பூன் கசகசாவை இரவில் போட்டு ஊரவைத்து காலையில் மையாக அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் சிகப்பாக மாறும்.
கூந்தல் பளபளக்க.
சிறிது சாதம் வடித்த கஞ்சியில்
ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில்
தேய்த்து குளித்துப் பாருங்கள்
எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு
நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.
முகம் பளபளப்பாக
ஒரு வாழைப்பழம், ஒரு ஸ்பூன் தேன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். அரைமணி நேரத்திற்கு பின் குளிர்ந்த நீரீல் கழுவி துடைக்க முகம் மிகவும் பளபளப்பாகவும் பொலிவாகவும் காணப்படும்

No comments:

Post a Comment