Tuesday, July 2, 2019

ஒரே நாளில் வாய் புண் மற்றும் வயிற்றுப் புண் குணமாக இயற்கை மருத்துவம்..! அதிகம் பகிருங்கள்..!

வாய் புண் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தான். வாய் புண் ஏன் வருகிறது என்பது பற்றி அதிகம் பார்த்துவிட்டதால் வந்தால் குணமாக்குவது எப்படி என் பார்க்கலாம்.! வாயில் புண் வந்துவிட்டால் உணவு எடுத்துக் கொள்வது மட்டும் இன்றி தண்ணீர் குடிப்பது கூட கஷ்டமாக இருக்கும். இந்த புண் உடனே குணமாக.. தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் வைக்கலாம். வீட்டில் தேன் இருந்தால் ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசிவிடுங்கள்.
உடனடியாக சரியாகிவிடும். வல்லாரை கீரை. இதுவும் வாய் புண்ணுக்கு சிறந்த நிவாரணி ஆகும். வல்லாரை கீரையை இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து சிறிதளவு சாறு எடுத்து வாய்ப் புண்ணில் பூசினால் வாய் புண் குணமாகும்.கற்றாழை ஜெல் சிறிதளவு எடுத்து அதில் நெய் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து வாயில் பூசி வர வாய்ப் புண் குணமாகும். வயிற்றுப் புண்ணுடனான வாய்ப்புண் குணமாக..
அகத்தி இலைகளை சிறியதாக அரிந்து சிறிது நெய் ஊற்றி வதக்கி சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாவதுடன் வாய்புண்ணும் குணமாகும். அகத்தில் இலையை பால் சொதி, குழம்பு போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம். அடுத்து வெண்டிக்காய் இதை சட்டியில் நெய் விட்டு ஒரு நிமிடம் வறுத்து அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண் மற்றும் வாய் புண் குணமாகும்.நெல்லிக்காயை அப்படியே வாயில் போட்டு சப்பி சாப்பிட்டால் வயிற்றுப் புண்னுடன் வாய்ப் புண்ணும் குணமாகிவிடும்.

No comments:

Post a Comment