Tuesday, June 12, 2012

கண் ஆரோக்கியம்

ரப்பர் பந்தை ஒரு கையில் எடுத்து தரையில் V போன்று போட்டு பின்பு மறுகையால் பிடிக்க வேண்டும். ஒரு கையில் பந்தை பிடிக்க வேண்டும் பின்பு பந்தை பார்க்க வேண்டும். பின் அந்த பந்தை பார்த்து இமைக்க வேண்டும்.பின்னர் அந்த பந்தை மறு கைக்கு மாற்றும் போது பார்வை அந்த பந்தை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். இவ்வாறு மாறி மாறி செய்ய வேண்டும். 20 முதல் 25 முறை வரை இவ்வாறு செய்ய வேண்டும்

பயன்கள் :

இதனால் கண்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கிறது.மேலும் கண் நரம்புகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. பார்வை தெளிவு பெறுகிறது. இதனால் கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும்.


கண் பாதுகாப்பு :


சிலருக்கு வெயிலில் சென்றாலே கண்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வறட்சி என பாடாய்படுத்தும். கோடை காலத்தில் இந்த பாதிப்புகள் மேலும் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம் தலை சுத்தமாக... சுகாதாரமாக இல்லாமையே!அதேபோல், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும்.

கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். கண் நோய் ஏற்பட்டால் தலைவலி உண்டாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்கவும். ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும்.

இந்த கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந்திட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும்.



No comments:

Post a Comment