Thursday, June 21, 2012

பாசிப்பருப்பு!

பருப்புகளில் உன்னதமாகக் கருதப்படுவது பாசிப்பருப்பு. இது குளிர்ச்சியானது... சுலபத்தில் ஜீரணமாகக் கூடியது. பாசிப்பருப்பு உடலுக்கு உள்ளே மட்டுமில்லை... வெளியிலும் மருந்தாகப் பயன்படுகிறது. இதை அரைத்து சோப்பு போல உடலில் பூசிக்குளிப்பது நல்லது. சோப்பு, உடலின் மேல்தோலில் இருக்கும் எண்ணெய்ப்பசையை சுத்தமாக உறிஞ்சி உலர வைத்துவிடும். இதனால் பித்த வெடிப்பு போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது. ஆனால், பாசிப்பருப்பு உடலுக்குத் தேவையான எண்ணெயை விட்டுவிட்டு அழுக்கை மட்டும் அகற்றும். மேனியின் பொலிவு குறையாமல் காக்கும். ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பிறகு, அவர்களுக்கு இயல்பாக முன்பு போல பசி எடுக்காது. பாசிப்பருப்பை வேகவைத்து 'சூப்' மாதிரி குடித்தால் நன்றாகப் பசிக்கும்.

No comments:

Post a Comment