உயிரை குடிக்கும் உணவு கலப்படங்கள்
* விலைவாசி ஏற்றத்தால் மளிகை பொருட்கள் இரண்டு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் உணவு பொருட்களின் கலப்படமும் அதிகரித்துள்ளது. வெளி இடங்களுக்கு சாப்பிட செல்வோர் இதுகுறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.
* ஓட்டல்களில் சாப்பாட்டில் சுண்ணாம்பை சேர்ப்பது, தேங்காய் சட்டினியில் புண்ணாக்கு கலப்பது, பாலில் தண்ணீர் கலப்பது, கசகசால ரவை கலப்பது, மிளகுல பப்பாளி கொட்டை கலப்பது, மேலும் இது போல நிறைய கலப்படங்கள் நாம் பல இடங்களில் பார்த்து தெரிந்து கொண்டது தான், இத்தகைய கலப்படங்களையும் பொருட்படுத்தாமல் வெளிடங்களில் உணவு உட்கொள்வோர் பலர்.
* விடுமுறை தினங்களில் வெளியில் சென்று சாப்பிடுபவர்கள் மற்றும் வெளி ஊர்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் ஓட்டல்களை நம்பிஉள்ளனர். உணவு குறைந்த விலைகள் உள்ள ஓட்டல்களில் விலைவாசி ஏற்றத்தை ஈடுகட்ட நிறைய பொருட்கள் கலப்படம் செய்கிறார்கள்.
* டீ தூளில் முந்திரி தோல், புளியங்கொட்டை தோழி, கலர் பவுடர் கலந்து டீ தயாரிக்கப்படுகிறது,
* நெய்யில் வனஸ்பதி கலந்து தூய்மையான நெய் என்று விற்பனை செய்யப்படுகிறது
*பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கக் கூடிய தாது எண்ணெய்தான் மினரல் ஆயில். இந்த மினரல் ஆயிலுக்கு நிறமும் கிடையாது. மணமும் கிடையாது. இதை அனைத்து வகையான எண்ணெயிலும் கலக்கலாம். ஒரு மாற்றத்தையும் காட்டாது. ஆனால் சாப்பிட்டபின் முழுவதும் ஜீரணம் ஆகாமல் அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்றுநோயை உண்டாக்கிவிடும்
*கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.
* மீன் மார்க்கெட்களில் கழிக்கப்படும் மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி தள்ளு வண்டி கடைகளில் மசால் தடவி சுவையான மீன் என்று விற்பனை செய்ய படுகிறது
* ஆடு, கோழி கறி கடைகளிலும், நோயால் பாதிக்கப்பட்டு இறந்த கோழி, ஆடு, குறைந்த விலைக்கு வாங்கி ஓட்டல்களில் உணவாக சமைத்து விற்பனை செய்யப்படுகிறது,ஆட்டு கறியுடன் மாட்டு கறியும் கலக்கப்படுகிறது,
* சாலையோர கடைகளில் காடை கறியுடன் காக்கா கறி கலந்து விற்பனை செய்கின்றனர்
* இட்லி மாவு விற்பவர்கள் கூட மீதமாகும் அல்லது பயன்படுத்த முடியாத மாவையும் கூட அரிசிமாவு, மைதாமாவு கலந்து விற்பனை செய்கின்றனர்
* சாலையோர கடைகளில் மலிவு விலைக்கு விற்கப்படும் பிரியாணி, கறி வருவல்களில் நெய் அல்லது ரீபன்ட் ஆயில் க்கு பதிலா மாட்டுக் கொழுப்பு எண்ணெய் கலக்கப்படுகிறது, இதை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் ஏற்படும்
* ஜூஸ் விற்கும் கடைகளில் கூட சர்க்கரைக்கு பதிலாக சாக்கர் பவுடர் கலக்கப்படுகிறது, இதை குடித்தால் வயிற்று வலி, வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப்புள்ளது
* வெளியிடங்களில் சாப்பிட்டால் சிலருக்கு வயிற்றுவலி,வயிற்றுபோக்கு, வாந்தி உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும். இத்தகைய பாதிப்புக்கு உணவு கலப்படமே காரணம்
* இத்தகைய கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறுவதை விட வெளியிடங்களுக்கு சாப்பிட செல்லும் முன் கடைகளின் சுகாதாரத்தை அறிந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது
* இன்னும் நாம் அறியாத உணவு கலப்படங்கள் அதிகம் உள்ளன.
உணவின் சுவை மட்டும் போதும் என்று நினைபோரும் ஏதாவது தின்னக் கிடைத்தால் போதும் என்று நினைபவரும் உணவின் தயாரிப்பு முறைகளையும் சேர்க்கப்படும் பொருட்களையும் பற்றிக் கவலையின்றி வெளியிடங்களில் நாகரீகம் என்ற போர்வையில் நண்பர்களுடன் சேர்ந்து தின்னும் கலாசாரம் பெருகக் காரணமாக இருக்கின்றனர்.வீடு உணவைப் புறக்கணித்து வெளி உணவை வரவேற்கும் மனப்போக்கு உள்ளவரை கலப்படக்க் காட்டில் மழை கொட்டும் .
ReplyDelete