Monday, November 26, 2012

புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்கள்:-


புளிச்சக்கீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
புளிச்சக் கீரையில் வைட்டமின் “ஏ”யும் தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன.


இக்கீரை உடம்புக்கு குளிர்ச்சியையும் செரிமான சக்தியையும் தருவதுடன் பித்தத்தையும் தணிக்கிறது. குடற்புண், மூத்திர நீரை வெளியேற்றுதல், இதய நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்ப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மலத்தை இளக்குகிறது. இக்கீரையின் புளிப்புத் தன்மையால் சிணுக்கு இருமல், மந்தம் நீங்கி, காய சித்தியும், வீரிய சக்தியும் உண்டாக்குகிறது. மேலும் வாத நோய் ருசியின்மை, சீதளம், இரத்தப் பித்த ரோகம், கரப்பான் வீக்கம் முதலிய நோய்களையும் நீக்கும். இந்தப் பூக்களைப் பிழிந்த சாற்றுடன் மிளகும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட, அரோசிகம், பித்த வாந்தி முதலிய நோய்களை நீக்கலாம். இவ்விதையின் எண்ணெயை வீக்கங்களுக்கும் ஊமைக் காயங்களுக்கும் தடவ வலி நீங்கும்.

இந்தக் கீரையைத் துவையலாகவும், சட்டினியாகவும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பொரியல், மசியல், குழம்பு போன்ற வேறு முறைகளிலும் இதைச் சமைக்கலாம்.

No comments:

Post a Comment