Monday, November 26, 2012

பாதங்களை பாதுகாப்பது எப்படி?


குளிர்கால சீதோஷ்ண மாற்றத்தால் பாதங்களுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படும். பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் பாத வெடிப்புகள், வறட்சியான பாதம் மற்றும் பாதங்கள் மென்மையிழந்து கடினமாக இருப்பது போன்றவைகள்.


இதைத் தவிர்க்க சில டிப்ஸ்:

* குதிக்கால்களில் அழுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் கிருமிகளால் பாதங்கள் பாதிப்பு அடைவதைத் தவிர்க்க முடியும். இதற்கு தினமும் பாதங்களை கொஞ்சம் உப்பு சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்பு தேய்த்து, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் கண்ணுக்கு தெரியாத பாதத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாதம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

* பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சேர்த்து சுத்தம் செய்துவிட‌ வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று. ஏனெனில் கிருமிகள் பொதுவாக‌ கால்விரல் நகங்களில் அதிகம் தங்கும். அதைத் தடுக்கலாம்.

மேற்கூறியவாறு பாதங்களை பராமரித்து வந்தால், குளிர்காலத்திலும் பாதங்கள் வறட்சியின்றி, மென்மையோடும், சுத்தமாகவும் அதேசமயம் அழகாகவும் மின்னும்.

No comments:

Post a Comment