Tuesday, February 26, 2013

முழங்கால் கருப்பை நீக்க சில டிப்ஸ்…


உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே அத்தகைய அழகைக் கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.

இயற்கையான முறையில் முழங்கால் கருப்பை நீக்க சில டிப்ஸ்….


* எலுமிச்சை சாற்றை முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, முழங்காலில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் இரவில் படுக்கும் முன்பு எலுமிச்சையின் தோலை வைத்து முழங்காலில் 4-5 நிமிடம் தேய்த்து, பின் காலையில் கழுவ வேண்டும். அதுவும் கழுவியதும் உடனே மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது. அதேப் போல் எலுமிச்சையை தடவுவதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது.


* முழங்கால் அல்லது முழங்கைக்கு தேங்காய் எண்ணெயை தடவி 5-8 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்தும் செய்யலாம்.


* தயிருடன் சிறிது வினிகரை சேர்த்து கலந்து தடவி வந்தால், முழங்காலில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.


* பேக்கிங் சோடாவுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 3-4 நிமிடம் தேய்த்து, பின் 10-15 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவிட வேண்டும். கழுவியதும், மறக்காமல் பாடி லோசனை தடவ வேண்டும்.


* கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தொடர்ந்து தடவி வந்தால், முழங்கால் நன்கு வெள்ளையாகிவிடும்.

* பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை மற்றும் தேனை கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.


* கருப்பாக இருக்கும் பகுதியில் தயிருடன் எலுமிச்சையை சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பாலால் ஒரு முறை கழுவி, பின் நீரால் கழுவினால் கருப்பான பகுதி வெள்ளையாகிவிடும்.


* எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், பாடி லோசனை தடவி படுத்தால், சருமம் நன்கு மென்மையாகி, ஈரப்பதத்துடன் இருக்கும்.


* கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, கருப்பாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்காலில் தடவி, 5-8 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் கருப்பான இடம் வெள்ளையாகிவிடும்.


ஆகவே மேற்கூறிய சிலவற்றையெல்லாம் உங்கள் வீட்டில் ட்ரை செய்து, உங்கள் முழங்கை மற்றும் முழங்காலை அழகாக வெள்ளையாக வைத்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment