உருளைக்கிழங்கு கேரட் இரண்டையும் சம அளவு சேர்த்து மைய அரைத்து கண்கள் மூடிக்கொண்டு கண்களை சுற்றிலும் அடர்த்தியாக வைத்து 10-15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.
குங்குமப் பூவை சிறிது தண்ணீர்விட்டு ஊறவைத்து அதனுடன் சிறிதளவு வெண்ணையைக் குழைத்து கண்களை மூடிக் கொண்டு கண்களைச் சுற்றிலும் அடர்த்தியாக வைத்து 10 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், கருவளையம் காணாமல் போவதுடன் அங்குள்ள தோலும் பளபளப்பாகும்.
பின் வரும் பழச்சாறுகளை இரண்டையும் சம அளவு கலந்து கருவளையத்தின் மீது தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
எலுமிச்சம் பழச்சாறு, ஆரஞ்சுப் பழச்சாறு
எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிப் பழச்சாறு
எலுமிச்சம் பழச்சாறு, குளிர்ந்த பால்
வெள்ளரிக்காய்ச் சாறு, உருளைக்கிழங்கு சாறு
வெள்ளரிக்காய்ச் சாறு கேரட் சாறு
வெள்ளரிக்காய்ச் சாறு, பன்னீர்
கறிவேப்பிலை சாற்றுடன் கொஞ்சம் வெண்ணெய்
No comments:
Post a Comment