Wednesday, October 9, 2013

செம்பருத்தி



செம்பருத்தியில் பல வகைகள் உள்ளன. ஒற்றை இதழ் மற்றும் அடுக்குச் செம்பருத்தி என்று கண்ணைக் கவரும் வகையில் அழகாக உள்ள இதற்கு மருத்துவப் பலன்களும் ஏராளம்.

இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் சிறப்பான தீர்வு.

தேங்காய் எண்ணையில் செம்பருத்திப் பூவின் காய்ந்த மொட்டுக்களை ஊற வைத்து தினமும் தலைமுடியில் பூசி வந்தால், முடி மென்மையாகவும், கருப்பாகவும் செழிப்பாக மற்றும் அடர்த்தியாக வளரும்.

இதன் பலன்கள் :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

செம்பருத்தி இலைகளை கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் மட்டுப்படும்.

உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்

அடிக்கடி செம்பருத்தியைப் பயன்படுத்தினால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

சருமத்தைப் பொலிவடையச் செய்யும்.

No comments:

Post a Comment