இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டும் என்பவர்கள் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் கண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உறக்கம் கெடும். ஜீரணமாகாத உணவு நெஞ்செரிச்சல்,வயிற்றுப் பொருமல் போன்றவற்றையும் ஏற்படுத்தி இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்துவிடும்.
பீட்ஸா
சாஸ், தக்காளி, சீஸ், மைதா போன்றவைகள் கலந்த இத்தாலிய உணவுவகையான பீட்ஸாவை இரவில் சாப்பிட்டால் அவை எளிதில் ஜீரணமாகாது. அதேபோல் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால் உடனே உறங்கப் போகக்கூடாது நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ மேற்கொள்ளவேண்டும் இல்லையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
மாமிசஉணவுகள் தவிர்க்கலாம்
இரவுநேரங்களில் அதிக கொழுப்புள்ள மாமிச உணவுகளை உட்கொள்ளக்கூடாது. ரெட்மீட் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். காலையில் சாப்பிடுதற்கு ஏற்ற அந்த உணவுகளை இரவில் சாப்பிடுவது உகந்ததல்ல. எனவே இரவில் மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.
சாக்லேட் வேண்டாம்
இரவில் படுக்கைக்குப் போகும்முன் அதிகம் கேண்டி சாப்பிடவேண்டாம். ஏனேனில் அதில் உள்ள சர்க்கரை அப்படியே ரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இதனால் இரவில் தூக்கமிழக்க நேரிடலாம்.
இந்தப் பழங்கள் வேண்டாம்
சில பழங்களில் உள்ள அமிலங்கள் தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும். ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, பெர்ரீ ஆகிய பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதை விட பகல்நேரத்தில்தான் சாப்பிடவேண்டும் என்கின்றனர்
எனவே, இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள். உடல் குண்டாகாமல் டயட்டில் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.
No comments:
Post a Comment