Tuesday, March 19, 2013

காலிஃப்ளவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?



பூ நல்ல வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். பூவை ஒட்டி இருக்கும் இலை பசுமையாக இருக்க வேண்டும். பூவின் அளவு பெரியதாகவோ சிறியதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சிலவற்றில் சிறிய பூக்களுக்கு இடையில் இலை வளர்ந்து இருக்கும். அதனால், எந்தக் கெடுதலும் இல்லை. இலையை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.

தண்டின் நடுவிலோ, பூக்களுக்கு இடையிலோ பெரிய பச்சைப் புழு இருக்கும். மொட்டிலேயே பூவின் உள்ளே போய் அதன் சத்தை சாப்பிட்டு வளரும். பார்க்கும்போது சட்டென்று புழு தெரியாது. கூர்ந்து பார்த்தால், புழு இருக்கும் இடத்தைச் சுற்றி கருப்புப் புள்ளிகள் இருக்கும். ஜாக்கிரதை! புள்ளி இருக்கும் பூவை வாங்க வேண்டாம்.

அப்படியே வாங்கிவிட்டாலும் புழு இருக்கும் பகுதியை நீக்கிவிட்டுத் தாராளமாக உபயோகிக்கலாம். சமைப்பதற்கு முன் பூவை நறுக்கி உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுக்கவும். புழு இறந்து மேலே வந்துவிடும்.

பூ மஞ்சளாக இருந்தால் பழசு என்று அர்த்தம்.

பாதுகாப்பது எப்படி?

வெளியிலேயே ஒரு நாள் 2 நாள் வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்கும் போது பிளாஸ்டிக் பையில் வைக்கக் கூடாது. துணிப்பையில் வைக்கலாம்.

ஃபிரிட்ஜின் கீழ் பகுதியில் உள்ள கிரிஸ்பரில் வைக்கவும். அதுவும் தண்டு மேல் பக்கமாக இருக்கும்படி வைத்தால் பூவின் மேல் ஈரம் தங்காது. ப்ரெஷ்ஷாக இருக்கும்

No comments:

Post a Comment